இந்தியர்களுக்கு மிகமுக்கிய தனிநபர் அடையாள ஆவணமாக பான் கார்டு உள்ளது. இது வெறும் அடையாள ஆவணமாக மட்டுமில்லாமல் பல்வேறு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு பயன்படுகிறது. எனவே ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பான் கார்டு இணைப்பது இந்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. வருமான வரித் துறையால் இந்த பான் கார்டு வழங்கப்படுகிறது. இது ஏடிஎம் கார்டு போன்று பிளாஸ்டிக் வடிவிலான கார்டு தான். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. ஒருவேளை பான் கார்டு தொலைந்து விட்டால் பான் கார்டு ஆன்லைன் மூலமாக எப்படி டவுன்லோட் செய்யலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

முதலில் வருமான வரித்துறையின் https://www.incometax.gov.in/iec/foportal என்ற இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும். அதில் இ-ஃபைலிங் போர்டல் முகப்புப் பக்கத்தில் கிளிக் செய்து, உடனடி இ-பான் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். e-PAN பக்கத்தில், Get New e-PAN என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். ஒரு புதிய இ-பான் பக்கத்தில் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு, நான் உறுதிப்படுத்துகிறேன் (I confirm) என்பதைத் தேர்வு செய்து Continue என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

TP சரிபார்ப்பு பக்கத்தில், நான் ஒப்புதல் விதிமுறைகளைப் படித்துவிட்டேன், மேலும் தொடர ஒப்புக்கொள்கிறேன் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். OTP சரிபார்ப்பு பக்கத்தில், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட 6 இலக்க OTP ஐ உள்ளிட்டு, UIDAI உடன் ஆதார் விவரங்களை சரிபார்க்க தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின் ஆதார் விவரங்களைச் சரிபார்க்கவும் பக்கத்தில் கிளிக் செய்து, நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்ற தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இறுதியாக சமர்ப்பித்த பிறகு, ஒப்புகை எண்ணுடன் (Acknowledgement Number) செய்தி காட்டப்படும். பின் நீங்கள் e-PAN பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.