சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாத்தாவை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவரது 7 வயது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்து சிறுமி வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு 75 வயதான சிறுமியின் தாத்தா மட்டுமே இருந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி கொண்ட முதியவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் தாத்தாவை கைது செய்தனர்.