வீட்டிற்கு வந்து கொண்டிருந்த விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அப்துல்லாபுரம் பஜனை கோவில் கிராமத்தில் விவசாயியான முனுசாமி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை முனுசாமி கால்நடைகளுக்கு தீவனங்களை வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கேசவணங்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வளைவில் முனுசாமி திரும்ப முயன்றார். அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் முனுசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று விவசாயியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *