வீட்டிற்கு திரும்பி வரவில்லை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள பச்சேரி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துலட்சுமி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் முத்துலட்சுமியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் முத்துலட்சுமியின் சடலம் மிதந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *