வீட்டிற்கு அருகே நின்ற இளம்பெண்…. திடீரென நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பாம்பு கடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் மாலைமேடு பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர்கள் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகளான நேத்ரா(29) என்பவர் பெட்டி கடையில் தனது தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேத்திரா தனது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த விஷப்பாம்பு இளம்பெண்ணை கடித்தது. இதனால் மயங்கி விழுந்த இளம்பெண்ணை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேத்திரா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *