வீட்டின் சுற்று சுவரை ஏறி குதித்த கரடி…. கண்காணிப்பு கேமரா காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் சதுக்கத்திலிருந்து கோட்டாஹால் வழியாக செல்லும் சாலையில் பெரியார் நகர் அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்தது.

இதனை பார்த்ததும் வளர்ப்பு நாய் குரைத்தது. நாய் குரைக்கும் சத்தம் கேட்ட வீட்டின் உரிமையாளர் மின் விளக்கை ஒளிர செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த போது கரடி அங்கும் இங்கும் உலா வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரத்தில் கரடி தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. அந்த பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.