வீடே கமகமக்கும் கரம் மசாலா பொடி…. தயார் செய்வது எப்படி….? இப்படி செஞ்சி பாருங்களேன்…!!!!

உங்கள் வீட்டிலேயே நல்ல மணமும், சுவையும் தரக்கூடிய கரம் மசாலா பொடி தயார் செய்வது எப்படி என்பது குறித்து இப்பொது பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

பெருஞ்சீரகம் (சோம்பு) – 100 கிராம்
பட்டை – 10 கிராம்
கிராம்பு – 10 கிராம்
அன்னாசிப்பூ – 10 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்

செய்முறை:

இந்த பொருள்கள் அனைத்தையும் வெயிலில் குறைந்தது 2 மணி நேரம் காய வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டில் அனைத்து பொருள்களையும் போட்டு கிளறி ஆற விடவும். நன்றாக ஆறிய பிறகு மிக்ஸ்சியில் போட்டு அரைக்கவும்.  சூடு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத புட்டியில் போட்டு வைக்கவும்.  இப்பொது சுவையான கரம் மசாலா பொடி தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *