தமிழகத்தில் நேற்று நடைபெற்ற முகாமில் 98.18 சதவீதம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 57 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் 56.34 லட்சம் குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டு விட்டது. மீதமுள்ளோருக்கு வீடு வீடாக சென்று மருந்து செலுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.