கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள 3 இடங்களில் அடுத்தடுத்து கடந்த 29ஆம் தேதி நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் பல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இதுவரை 240 பேரை காணவில்லை என்று கூறப்படுவதால் அவர்களை தேடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்தோருக்கு பாதுகாப்பான இடத்தில் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று கேரளா அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 29ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரியில் சிக்கி இதுவரை 360 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு வீடுகள் இழந்து நிவாரண முகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாற்று இடங்களில் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.