இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன்களின் பயன்பாடு என்பது அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளை கூட சரிவர கவனிக்காமல் ஸ்மார்ட்போனில் மூழ்கி இருக்கிறார்கள். இதனால் சில சமயங்களில் விபரீதமான விளைவுகள் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது ஒரு தந்தை வீடியோ கேமில் மூழ்கியிருந்ததால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் சம்பவ நாளில் குழந்தையின் தாய் வெளியே சென்ற நிலையில் வீட்டிற்கு வந்த போது 2 வயது குழந்தை காரில் மூச்சுப் பேச்சின்றி இன்றி கிடந்துள்ளது.
உடனடியாக அவர் குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில் குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் 47.7 டிகிரி செல்சியஸ் வெப்பத்தினால் குழந்தை உயிர் இழந்தது தெரியவந்துள்ளது. அதாவது காரில் குழந்தையை விட்டுவிட்டு அவருடைய தந்தை வீட்டில் வீடியோ கேமில் மூழ்கியுள்ளார். இதனால் காரில் இருந்த குழந்தை மூச்சு விட முடியாமல் பரிதாபமாக துடிதுடித்து பலியாகியுள்ளது. மேலும் சுமார் 3 மணி நேரமாக அந்த குழந்தை மிகவும் துடிதுடித்து வேதனையுடன் உயிரிழந்துள்ளது. இதன் காரணமாக அந்த குழந்தையின் தந்தையை காவல்துறையினர் கொலை வழக்கில் கைது செய்துள்ளனர்.