வீடியோ எல்லாம் இருக்கு…! ஆதாரத்தோடு தான் பேசுறோம்… ஸ்டாலினிடம் பதில் கேட்குவும் பாஜக …!!

முதலமைச்சர்  குடும்பத்திற்க்காக ஞாயிறு கிழமை  கோவிலை திறக்காங்க என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நிறைய பத்திரிகைகளில் நியூஸ் வந்திருக்கு உண்மையா ? பொய்யா என்று தெரியாது. நம்ம திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு கோவிலுக்கு திமுகவினுடைய முக்கியமான தலைவர் போன ஞாயிறுகிழமை சென்று வணங்கி வந்திருக்கின்றார். ஞாயிற்றுக்கிழமை கோவில் கண்டிப்பா பூட்டி இருக்க வேண்டும்.

கோவிலுக்கு வெளியே பிரச்சினை இருக்கு, வீடியோ எல்லாம் வந்து இருக்கு. அதெல்லாம் மக்கள் இப்போ ரிலீஸ் பண்ண ஆரம்பிச்சாங்க முதலமைச்சர் என்ன பதில் சொல்வார் ? முதலமைச்சருடைய குடும்பத்திலிருந்தே ஞாயிறு கிழமை அன்று கோவிலுக்கு போறாங்க, அவங்களுக்காக அதிகாரிகள் கோவிலைத் திறக்கிறார்கள்,  அவர்களுக்காக மட்டும் அங்க பூஜை பண்ணுறாங்க.

அதனால் இவர்கள் வைத்திருப்பது அவர்களுடைய குடும்பத்தில் இருக்கின்ற சில பேருக்கு பொருந்தாதது.சாதாரண பொதுமக்கள் கோவிலுக்குப் போகக்கூடாது என்பதற்க்காக  சம்பந்தமே இல்லாம அமைச்சர் பேசிட்டு இருக்காரு. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை திறக்காததற்கு மத்திய அரசுக்கு போய் வேற சொல்றாங்க. நாங்க ஆதாரபூர்வமாக பேசியுள்ளோம்.

மத்திய அரசு எப்ப வந்து தியேட்டரை திறக்க சொல்லியிருக்காங்க. நீங்கள் சன் பிக்சர்ஸ், சன்குடும்பம், உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய புரோடக்சன் கம்பனி உங்களுடைய படம் நன்றாக செல்ல வேண்டும் என்பதற்காக நீங்கள் கோவிலை மூடிஉள்ளீர்கள். கடவுள் மறுப்புக் கொள்கையை திணிக்கணும், உங்களுடைய படத்தை விடுமுறைகளில் மக்கள் பார்க்க வேண்டும், சினிமா தியேட்டர்களில் கூட்டம் வர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்த டிராமா ? அதனால் தான் நான் ஏற்கனவே கேள்வி கேட்டு இருக்கேன்.

கொரோனா காலகட்டத்தில் எதற்காக முதலமைச்சருடைய மகன் ஒரு சினிமாவை புரோமொட் பண்ணி பாருங்க, பாருங்க என சொல்ல வேண்டும். கொரோனா மேல அக்கறை இருக்குனு சேகர்பாபு சொன்னார் என்றால்,  நம்முடைய முதல்-அமைச்சர் உடைய மகன் எதற்காக அவர் ட்விட்டரில், ஃபேஸ்புக்கில் நாங்கள் தயாரித்த படம் போய் பாருங்க அருமையா இருக்கு என்று சொல்லணும் ? எதற்காக சினிமா தியேட்டரை ஓபன் பண்ண வேண்டும் ?என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *