விவாகரத்துக்குப் பின் மீண்டும் இணைந்த நட்சத்திர ஜோடி… வெளியான புகைப்படம்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

விவாகரத்தாகி ஏழு ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஞ்சித், பிரியா ராமன்  இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான நேசம் புதுசு படத்தில் இணைந்து நடித்த ரஞ்சித், பிரியா ராமன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது நடிகர் ரஞ்சித் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூரப்பூவே சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதேபோல் நடிகை பிரியா ராமன் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .

இந்நிலையில் ரஞ்சித், பிரியா ராமன் இருவரும் தங்களது திருமண நாளன்று மீண்டும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் திருமண நாளில் ஒன்று சேர்ந்த இந்த நட்சத்திர ஜோடிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *