விவசாயி மர்ம சாவு….. கிராம மக்கள் மறியல்…. போலீஸ் தீவிர விசாரணை…..!!

விவசாயி சாவில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொது மக்கள் மற்றும் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் யூனியனை அடுத்துள்ள கிளியூர் கிராமத்தில் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது வயலில் வேலை செய்து கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து திருநாவுக்கரசு வயல்வெளியில் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் உயிர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியிலடனர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் திருநாவுக்கரசு உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் திருநாவுகரசு சாவில் மர்மம் இருப்பதாக கூறி கிராம மக்கள் மற்றும் அவரது உறவினர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ஜெயசிங், தாசில்தார் ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பின்னரே பொது மக்கள் கலைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சந்தேகத்தின் பேரில் 7 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *