விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்தவர்…. ஒரு விவசாயியா…? – ஸ்டாலின் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

அந்த வகையில் மு.க ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வேதாரண்யத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட மு.க ஸ்டாலின், “விவசாயிகளை எனக்கு பிடிக்கும். ஆனால் போலி விவசாயிகளை தான் பிடிக்காது. பச்சைத் துண்டு போட்டால் விவசாயியா? விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்தவர் ஒரு விவசாயியா?” என்று கடுமையாக சாடியுள்ளார்.