விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்… வெளியான தகவல்…!!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ செய்தி குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30-ம் தேதி காலை 10:30 மணி முதல் மதியம் 1.35 மணி வரை திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் கூட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவு துறை, வேளாண்மை மற்றும் வணிகத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த்துறை வங்கியாளர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கேள்விகளுக்கு பதில் அளிக்க இருக்கின்றனர். மேலும் இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்டம் முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை கூறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply