இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயனடையும் விதமாக பி எம் கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 16 தவணை வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் 17வது தவணைத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் பி எம் கிசான் திட்டத்தின் விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட 2000 ரூபாயை பெற வசதியாக தபால் அலுவலகங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

9.3 கோடி விவசாயிகளுக்கு 17வது தவணைத் தொகை சமீபத்தில் வரவு வைக்கப்பட்ட நிலையில் வங்கி கணக்கில் உள்ள அந்த பணத்தை விவசாயிகள் எடுப்பதற்கு வசதியாக ஜூன் 30-ம் தேதி வரை சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தபால் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இதனை பயன்படுத்தி பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.