விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த இரண்டு வருடங்களாக வேளாண்மைக்கு என்று தனி நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பாசன வசதிகளை மேம்படுத்துவதற்காக நீர் ஆதாரங்களை உருவாக்குதல், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேளாண் பம்பு செட்டுகளுக்கு புதிதாக இலவச மின் இணைப்பு வழங்குதல், சூரிய சக்தி மூலமாக இயங்கும் பம்பு செட்டுகளுக்கு மானியம், நுண்ணீர் பாசன அமைப்புக்கு மானியம் போன்ற பல வகைகளில் இந்த அரசு உதவி வருகிறது.

இந்த நிலையில் மானியத்தில் புதிய பம்பு செட் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர், மானியத்தில் பம்புசெட் அமைக்க சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற உழவன் செயலி, www.mis.aed.tn.gov.in என்ற தளத்தில் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்றார்.