விவசாயிகளே…. ஆதாருடன் வங்கி கணக்கு, செல்போன் எண் இணைப்பு…. இன்றே கடைசி நாள்….!!!!

பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தில் நிதி கிடைக்க வேண்டும் என்றால் ஆதாருடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை  நவம்பர் 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள விவசாயிகளுக்காக கௌரவ நிதி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் விதம் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 13வது தவணை பணம் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தொடர்ந்து நிதி உதவி பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு மற்றும் செல்போனியின் ஆகியவற்றை  நவம்பர் 30ஆம் தேதிக்குள் இணைத்து பதிவேற்றம் செய்வது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.