விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ்…. கோடிக்கணக்கில் பணம் பாக்கி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமர் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிவடைந்த விவசாயிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் 3 தவணைகளாக ரூபாய் 6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு தவணைக்கு 2,000 ரூபாய் என 3 தவணைகளாக வருடத்திற்கு 6,000 ரூபாய் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. மிகவும் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த நலிவடைந்த, விவசாயிகள் பயன்பெறும் வகையிலேயே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம் விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு பெற்று சிறப்பாக செயல்பட்டு வந்தாலும்கூட, இன்னும் பல விவசாயிகளுக்கு நிதி உதவி வரவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

மேலும் அரசு தரப்பில் வெளியாகியுள்ள தகவலின்படி, இந்த திட்டம் ஆரம்பத்தில் இருந்து மொத்தம் 14.22 லட்சம் பரிவர்த்தனைகள் தோல்வியில் முடிந்துள்ளது. அதாவது, விவசாயிகளுக்கு இன்னும் 374.78 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. மேலும் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பும் போது சில காரணங்களால் தோல்வியடைந்து திரும்ப வந்துள்ளது. தொடர்ந்து 2020-21 நிதியாண்டில் 8.19 லட்சம் பரிவர்த்தனைகள் தோல்வியடைந்துள்ளது. பின்னர் நடப்பு 2021-22 நிதியாண்டிலும் 9.11 லட்சம் பரிவர்த்தனைகள் தோல்வியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2019-20 ஆம் ஆண்டில் ரூபாய் 182.78 கோடியும், 2020-21 ஆம் ஆண்டில் 163.99 கோடியும், 2020-22 ஆம் ஆண்டில் ரூபாய் 28.47 கோடி பாக்கி உள்ளது. மேலும் விவசாயிகள் தங்களுடைய வங்கி கணக்கை தவறாக வழங்கி இருந்தாலும், பணம் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும், தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகவும் பரிவர்த்தனைகள் தோல்வியடைந்து இருக்கலாம் அதனால் விவசாயிகள் pm-kisan என்ற வெப்சைட்டில் சென்று தங்களது விவரங்களை சரியாக அப்டேட் செய்தால் தவணை பணம் சரியாக வங்கிக் கணக்கிற்கு வந்து சேரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *