தமிழகத்தை பொறுத்தவரையில் விவசாயிகளின் நலனுக்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடிக்கு உணவு மேற்கொள்ள மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஹெக்டர் ஒன்றுக்கு அதிகபட்சமாக 5,400 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். இதற்கு ஆதார் கார்டு, வங்கி புத்தகம், நிலச் சான்றிதழ், சிட்டா, பட்டா மற்றும் நில வரைபடம் ஆகிய ஆதாரங்கள் வழங்க வேண்டும். திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 25 மாவட்ட விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது