விவசாயிகளுக்கு ரூ.2000…. ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு….. மத்திய அரசு அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணம் கிடைத்து விடாது.

அவர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான விதிமுறை உள்ளது. அதாவது விவசாயிகள் ஆதார் வாயிலான கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயம் முடிக்க வேண்டும். கேஒய்சி என்பதை வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளும் நடைமுறையாகும். பொதுவாக இந்த நடைமுறையை வங்கிகள் அனைத்தும் கடைபிடிக்கின்றன. எனவே pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைவரும் நிதி உதவி பெறுவதற்கு சரிபார்ப்பு மிகவும் அவசியம்.

இந்நிலையில் இ கேஒய்சி முடிப்பதற்கான தேதி கடந்த ஜூலை 31ஆம் தேதி உடன் முடிவடைந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த கேஒய்சி சரிபார்ப்ப எப்படி முடிப்பது என்று பலருக்கும் தெரிவதில்லை. அதற்கான முழு விவரம் இதோ.

முதலில் https://pmkisan.gov.in/ என்ற பிஎம் கிசான் வெப்சைட்டில் சென்று ’farmers corner’ என வசதியின் கீழ் eKYC என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

உங்களுடைய ஆதார் நம்பரை பதிவிட்டு search கொடுக்க வேண்டும்.

உங்களுடைய மொபைல் நம்பருக்கு 4 டிஜிட் ஓடிபி நம்பர் வரும். அதைப் பதிவிட்டு submit கொடுக்க வேண்டும்.

மேலும் பிஎம் கிசான் திட்டத்தின் பயனாளிகளின் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை நீங்கள் எளிதாகச் சரிபார்க்கலாம். அதற்கு இந்த முகவரியில் சென்றால் போதும். https://pmkisan.gov.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *