விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல்…. உயர்நீதிமன்றத்தில் வழக்கு….!!!!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல் ,டீசல் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த ஐயா என்பவரின் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த மனுவில் பீகாரில்  விவசாயிகளுக்கு 1 லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய் என மானிய விலையில் வழங்குவதாக மனுதாரர் ஐயா தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு கூடுதல் சுமையாக உள்ளது என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *