தமிழகத்தில் விவசாயிகளின் நலனுக்காக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டில் வேளாண்மை இணை இயக்குனர்கள் கிராம அளவில் பயிர் சாகுபடிக்கான புதிய திட்டம் தயாரித்து அதற்கு தேவைப்படும் இடுப்பொருட்களை விவசாயிகளுக்கு வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேசமயம் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் பசுந்தாளுர விதைகளை உரிய காலத்தில் விநியோகித்து விதைப்பு செய்வதை கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.