ஆதவன் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர்தான் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். இதையடுத்து 4 படங்களை தயாரித்த பின் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிக்க தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின். அதன்பின் மனிதன், கண்ணே கலைமானே, சைக்கோ, நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்கள் அவரின் நடிப்பிற்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.

தற்போது அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வருவதால் சினிமாவில் இனி நடிக்கப் போவதில்லை என தெரிவித்து இருந்தார்.  இதற்கிடையில் கிருத்திகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் உதயநிதி. இவர்களுக்கு  இன்பா, தமன்யா என்ற மகனும்-மகளும் உள்ளனர். சமீபத்தில் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் தன் மகன் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, எனது மகனை அறிமுகம் செய்தபோது அவர் ஒரு கால்பந்து வீரர் என்று சொன்னார்கள்.

எனினும் அவர் டேபிள் டென்னிசும் ஆடுவார். என் வீட்டில் ஒரு டென்னிஸ் கோர்ட் உள்ளது. இதனிடையே எப்போதெல்லாம் இன்பநதி துவண்டுபோய் உள்ளாரோ அப்போது தன்னுடன் விளையாட அவர் அழைப்பார். அதில் என்னை தோற்கடிக்க செய்து அவர் கொஞ்சம் மகிழ்ச்சியடைந்து கொள்வார் என பேசியிருக்கிறார்.