விளையாட்டால் வந்த தகராறு… இருதரப்பினரிடையே மோதல்… 4 பேர் கைது…!!

இருதரப்பினரிடையே நடைபெற்ற தகராறில் தொழிலாளியை தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சிறுவன் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் சிறுவனை கண்டித்து வேறு பகுதிக்கு சென்று விளையாடுமாறு கூறியுள்ளார். இதனால் கோவிந்தராஜுக்கும் சிறுவனின் தந்தை சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சரவணன் மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேர் இணைந்து கோவிந்தராஜை கற்களால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து கோவிந்தராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் பீளமேடு காவல்துறையினர் சரவணன், மற்றும் அவரது நண்பர்களான அரவிந்தகுமார், விஜயன், மதனகோபால் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *