விளையாடி கொண்டிருந்த சிறுவன்…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள நத்தம்பட்டி கீழூரில் கற்பகவள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யனார்(5) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் வீட்டிற்கு பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூழ்கினான்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அய்யனார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.