விளையாடி கொண்டிருந்த குழந்தை…. டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. பெரும் சோகம்….!!

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 3 1/2 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் ஆட்டோ ஓட்டுநரான ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கயல்விழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 1/2 வயதுடைய பவன் என்ற குழந்தை இருந்துள்ளது. நேற்று மாலை வீட்டு வாசலில் பவன் சைக்கிளில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது செங்கற்களை ஏற்றி வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக சைக்கிளில் விளையாடி கொண்டிருந்த பவன் மீது மோதியது.

இதனால் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பவன் சம்பவ இடத்திலேயே பிரதாபமாக உயிரிழந்தான். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பிதப்பி ஓடிய டிராக்டர் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *