அமெரிக்காவைச் சேர்ந்த சாரா பூன் (47) என்ற பெண்ணும் ஜார்ஜ் டோரஸ்(42) என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர்கள் கண்ணாமூச்சி விளையாடி உள்ளனர். இருவரும் அதிக மது போதையில் இருந்ததாக தெரிகிறது. விளையாட்டின் போது ஜார்ஜை சாரா ஒரு சூட்கேஸ்க்குள் வைத்து பூட்டி விட்டார். இருவரும் அதிக போதையில் இருந்தனர். ஜார்ஜ் சூட்கேஸிலிருந்து அவராகவே வெளியே வருவார் என நினைத்துக் கொண்டு சாரா தூங்கிவிட்டார்.

மறுநாள் காலை எழுந்து தனது காதலனை தேடிய போது தான் அவரை சூட்கேசில் வைத்து பூட்டியது நினைவுக்கு வந்தது. உடனே சூட்கேஸை திறந்து பார்த்தார். அப்போது ஜார்ஜ் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மூச்சு திணறி ஜார்ஜ் இறந்து விட்டார். இதனால் போலீசார் சாராவை கைது செய்தனர். இந்த வழக்கு நான்கு ஆண்டுகளாக நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சாராவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.