கடலூர் மாவட்டத்தில் உள்ள வட தலைகுளம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யோகேஸ்வரன்(7) என்ற மகன் உள்ளார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் யோகேஸ்வரன் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கீழே விழுந்து யோகேஸ்வரன் கண்ணில் அடிபட்டதாக தெரிகிறது. மாலை நேரம் பள்ளி நேரம் முடிந்த போது ஆசிரியர்கள் யோகேஸ்வரன் கீழே விழுந்து விட்டதாக பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

உடனே பெற்றோர் யோகேஸ்வரனை புதுச்சேரி அரவிந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது யோகேஸ்வரனின் கண் கருவிழி சேதமானது தெரியவந்தது. மருத்துவமனையில் தொடர்ந்து மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.