“விளம்பரம் மூலம் மாப்பிள்ளை தேடும் 73 வயது மூதாட்டி”…அதுக்கும் கிராக்கிதான்…!!

மைசூர் மாவட்டத்தில் மாப்பிள்ளை வேண்டும் என்று 73 வயதான மூதாட்டி ஒருவர் விளம்பரம் கொடுத்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், மைசூரில் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனக்கு மாப்பிள்ளை வேண்டும் என்று செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து இருக்கிறார். அவருக்கு வயது 73 அவர் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். அவர் தன்னை விட மூன்று வயது அதிகமாக இருக்கும் மாப்பிள்ளை வேண்டும் என்று விளம்பரம் கொடுத்துள்ளார். மேலும் என்னுடன் நேரத்தை செலவிட ஒரு துணை தேவைப்படுகிறது. சட்டப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்.

அதற்காக செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து இருக்கிறேன். இதில் எந்த தவறும் கிடையாது. மேலும் முதல் திருமண விவகாரத்தில் அமைந்தது. என் பெற்றோர் இறப்பிற்குப் பிறகு நான் தனிமையிலேயே வாழ்ந்து வந்தேன். தற்போது தனியாக இருக்க எனக்கு பயமாக இருக்கிறது என தெரிவித்தார். இந்த விளம்பரத்தை பார்த்த பல முதியவர்கள் அவர்களைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து உள்ளனர்.