விருப்பமில்லாத திருமணம்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் அன்பு என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் மஞ்சுவின் விருப்பமில்லாமல் நடைபெற்றுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த மஞ்சு தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மஞ்சுவின் சடலத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *