விருச்சிகம் ராசிக்கு… பொல்லாதவர்கள் விலகி செல்வார்கள்.. கனிவாக பேசுங்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வ திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடும். மருத்துவச் செலவுகள் குறையும். பாக்கிகளை நயமாகப் பேசி வசூல் செய்வீர்கள். உத்தியோக மாற்றம் உருவாகலாம். இன்று வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டாகும். மிக சிறப்பாகவே இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உங்களுக்கு ஏற்படும்.

புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி நிலம் மனை போன்றவற்றை வாங்கும் யோகமும் இன்று உண்டாகும். விவசாயிகளுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். நீர் தேக்க நிலையில் நல்ல முன்னேற்றமான வருமானம் கிடைக்கும். இன்று எதிரிகள் தவிடுபொடியாகும் சூழலில் இருக்கும். மாணவச் செல்வங்கள் எதையும் சிறப்பாக செய்து வெற்றி பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் அடைவீர்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்