விருச்சிகம் ராசிக்கு.. சிக்கல் விலகி சிகரம் தொடுவீர்கள்.. சாமர்த்தியமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சிக்கல்கள் விலகி சிகரத்தைத் தொடும் நாளாகவே இருக்கும். சாமர்த்தியமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். இன்று தொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். இன்றுச தராசுத் தட்டில் இட்ட  எடைக்கல்லை போல ஏற்ற இறக்கமான பலன்களை தான் அடையக்கூடும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். குடும்ப தேவைகள் ஓரளவு பூர்த்தி ஆகும். செலவுகளும் கட்டுக்குள் அடங்காமல் இருந்தாலும், கடந்த கால கடன் பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறையும்.

இன்று மாணவர்களுக்கு உன்னதமான நாளாகவே அமையும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் இருந்த தடைகளும் விலகி செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று புதன்கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் பச்சை நிறம்