இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரில் யார் சிறந்தவர்கள் என்று முன்னாள் வீரர் ‌டேவிட் லாய்ட் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, சச்சின் டெண்டுல்கரை விட பிரையன் லாரா தான் சிறந்த பேட்ஸ்மேன். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் சிறந்தவர். அதேபோன்று வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விராட் கோலி சிறந்தவர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் சிறந்தவர். விராட் கோலி ஆபத்தானவர். அதன் பிறகு சச்சின் மற்றும் லாரா இருவரில் சிறந்தவர்கள் யார் என்று கேட்டால் நான் லாராவை தான் சொல்வேன். கண்டுபிடிக்கப்படாத இடங்களில் கூட பந்தை அடிக்கக்கூடிய லாரா எல்லாவற்றையும் இயல்பாக செற்றக்கூடியவர். இதை நான் சச்சினிடம் பார்த்ததில்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் மற்றும் விராட் கோலி இருவரும் சிறந்தவர்கள் தான். மேலும் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகள் என பார்க்கும்போது விராட் கோலி தான் சிறந்தவர் என்று கூறியுள்ளார்.