ஏர் இந்தியா விமானம் ஒன்று ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் வணிக வகுப்பில் பயணித்த பெண் ஒருவர் மீது குடிபோதையில் இருந்த ஆண் ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். கடந்த வருடம் நவம்பர் 22 -ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேபின் குழுவினரிடம் கூறியதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் டாட்டா தலைவர் சந்திரசேகரனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் பின் இது தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது. இது குறித்து அந்த பெண் கூறியதாவது, மதிய உணவிற்கு பின் தன்மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். மற்றொருபுறம் இது குறித்து ஏர் இந்தியா போலீசில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.