உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ விமான நிலையத்திற்கு ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சல் லக்னோவில் இருந்து மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அதிகாரிகள் சந்தேகப்படும்படியான அந்த பார்சலை பிரித்து சோதனை செய்தனர். அப்போது பிளாஸ்டிக் டப்பாவுக்குள் தண்ணீர் ஊற்றப்பட்டு பச்சிளம் குழந்தையின் உடல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கூரியர் ஏஜென்டை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பான வீடியோவும் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.