விமான நிலையத்தில்…. விதிமுறைகளை கடைபிடிக்கலனா உடனடி அபராதம்… விமான போக்குவரத்து அறிவிப்பு..!!

விமான நிலையங்களில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களிடம் உடனடி அபராதம் வசூலிக்க வேண்டும் என அனைத்து விமான நிலையங்களுக்கு இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

முககவசம் அணிவதை கட்டாய மாக்கும் வகையில் விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் நல்ல பாதுகாப்பு விதிகளை அறிவித்துள்ளார். அந்த உத்தரவின்படி விமான நிலையத்துக்குள் நுழைவதில் இருந்து பயணத்தை முடித்துவிட்டு வெளியே வரும்வரை கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும். விமானம் புறப்படுவதற்கு முன்பு யாராவது முககவசத்தை அணியாமலோ, மூக்குக்கு கீழே அணிந்திருந்தாலோ கூடாது. அவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கவும் அனைத்து விமான நிலையங்களுக்கு இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.