இந்தியாவில் ஐ ஆர் சி டி சி இணையத்தளம் ரயில் மற்றும் விமான பயணிகளுக்கு உதவும் விதமாக சிறந்த முறையில் டிக்கெட்டுகளை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றது. அதில் ரயில் டிக்கெட் முன்பதிவில் பயணிகளுக்காக அடிக்கடி பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி தற்போது விமான டிக்கெட் முன்பதிவு காண சிறந்த சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஐ ஆர் சி டி சி இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யும் நபர்களுக்கு சேவை கட்டணம் கிடையாது என்று புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதே சமயம் வங்கிகளின் டெபிட் கார்டு மூலமாக புக்கிங் செய்தால் 2000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த புதிய சலுகை செப்டம்பர் 25 முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை உலக சுற்றுலா தினம் வரை மட்டுமே வழங்கப்படும் என்று ஐ ஆர் சி டி சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பு விமான பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.