விமானத்தில் பயணித்து வழங்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நோக்கி கடந்த ஜூன் 9-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் சென்றது. இந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தான் அனுபவித்த வேதனை குறித்து சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அந்த பயணி கூறியதாவது, விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்ததை கண்டுபிடித்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக விமான பணிப்பெண்ணிடம் புகார் அளித்துள்ளார். அந்த பணிப்பெண்ணும் உடனே மன்னிப்பு கேட்டுள்ளார். விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.