விமானத்தில் பறக்க ஆசையா?….. ரூ.1126க்கு டிக்கெட் கிடைக்கும்….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு Spicejet நிறுவனம் 1126ரூபாய்க்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் ஜனவரி 24 முதல் 29ஆம் தேதி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகையின் மூலம் ஜனவரி 24ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம்.

இந்த சிறப்பு சலுகையின் கீழ் அகமதாபாத், ஆக்ரா, சென்னை, சண்டிகர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட 68 நகரங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடியும். இந்த டிக்கெட்டை இந்நிறுவனத்தின் நகர அலுவலகங்கள் மற்றும் விமான நிலைய அலுவலகங்கள் மூலமாக நேரடியாகவும் இணையதளம் மற்றும் மொபைல் பயன்பாடு மூலமாகவும் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://www.spicejet.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.

Leave a Reply