விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 144 பயணிகள்…. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு….!!!!!

விமானத்தில் திடீரென இயந்திரக்  கோளாறு ஏற்பட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தினம் தோறும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் செல்வது வழக்கம். அதேபோல் நேற்று காலை 144 பயணிகளுடன் கத்தார் ஏர்வேல் விமானம்   புறப்படுவதற்காக ஓடுதளத்தில் சென்றது.

அப்போது விமானத்தில் திடீரென  இயந்திரக்  கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விமானி உடனடியாக விமானத்தை தரை  இயக்கியுள்ளார். இதனால் பயணிகள் அனைவரும் பத்திரமாக உயிர் தப்பியுள்ளனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.