விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட முதல்வர்….. எதற்காக தெரியுமா?….. பஞ்சாப் அரசியலில் தீயாய் பரவும் செய்தி….!!

பஞ்சாப் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான் ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் அவர் மீது சிரோமணி அகாலி தள சுக்பீர் சிங் தலைவர் கடுமையாக குற்றச்சாட்டுகளை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அதன்படி விமானத்தில் நன்றாக குடித்துவிட்டு போதையில் இருந்த பகவந்த் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டார். விமானத்தில் அதிகபோதையில் நடக்க முடியாமல் பகவந்த இருந்துள்ளார் என்று சக பயணிகள் கூறிய தகவல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இதனால் விமானம் 4 மணி நேர காலதாமதத்துடன் சென்றது.

அதனை தொடர்ந்து ஆம் ஆத்மி தேசிய கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் அதனை பகவந்த் தவற விட்டுள்ளார். இந்த செய்திகள் உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபி மக்களை அவமதிப்புக்கும் துன்பத்திற்கும் ஆளாகியுள்ளது என்று சிங் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் அமைதி காக்கு பஞ்சாப் அரசையும் சாடியுள்ள அவர், இது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் கட்சியின் தலைவர் மற்றும் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் வந்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சுக் பீர் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.