“விமானங்களில் ஜன்னல் ஏன் கோள வடிவில் உள்ளது”…. உங்களுக்கு தெரியுமா?….. அப்ப கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!

விமானம் அனைவருக்கும் பிடித்த ஒரு வாகனம். ஒருமுறையாவது விமானத்தில் செல்ல வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக உள்ளது. அதிலும் விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கையில் தான் பலருக்கும் பிடிக்கும். ஜன்னலோரத்தில் இருந்தபடி விமானத்தில் இருந்து கீழே பார்ப்பது என்பது ஒரு தனி சுகம். இந்த விமானத்தில் ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்து உள்ளீர்களா? அதாவது பேருந்து, பஸ், கார் உள்ளிட்டவற்றில் சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவில் தான் ஜன்னல்கள் இருக்கும். ஆனால் விமானத்தில் மட்டும் எதற்காக வட்டம் வடிவில் அல்லது கோள வடிவில் ஜன்னல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றித்தான் நாம் இதில் பார்க்க போகிறோம்.

விமானத்தில் எதற்கு சதுரம் மற்றும் செவ்வக வடிவில் ஜன்னல்கள் வைக்கவில்லை என்றால் விமானம் வானத்தில் மிக உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் பொழுது விமானத்திற்கு வெளியே மிகவும் அதிகமான ஏர் பிரஷர் என்று கூறக் கூடிய காற்றழுத்தம் அதிக அளவில் இருக்கும். அப்படி காற்றழுத்தம் அதிகமாக இருக்கும் இடத்தில் செவ்வக வடிவில் அல்லது சதுர வடிவில் ஜன்னல் இருந்தால் நான்கு முனைகள் வெளிக்காற்று அழுத்தத்தை தாக்குப் பிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.  இதனால் வெளிக்காற்று அழுத்தம் காரணமாக விமானத்தின் கண்ணாடிகளில் விரிசல்கள் அல்லது உடைவதற்கு வாய்ப்புள்ளது. அதுவே வட்ட மற்றும் ஓவல் வடிவிலான ஜன்னல்கள் இருந்தால் காற்று சாதாரணமாக பரவி செல்லும். இதனால் விமானத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று கூறுகிறார்கள். இதனால்தான் விமானத்தில் கோள வடிவில் அல்லது வட்ட வடிவில் ஜன்னல்கள் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *