திருச்சி மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பாஸ்கர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கர் முசிறியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருக்கும் புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாஸ்கர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஆம்புலன்ஸில் பாஸ்கரை ஏற்றும்போது அவரது உயிர் பிரிந்தது. பின்னர் வாலிபரின் உடல் முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.