வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்து இருந்த நிலையில் தற்போது பொதுத்தேர்வு சட்டம் 2024 ஏற்றியுள்ளது. . நடபாண்டில் நீட் மற்றும் யுஜிசி போன்ற முன்னணி தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது போன்ற முறைகேடுகளை தவிர்க்க பொதுமக்கள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுத்தல்) சட்டம் 2024 அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சட்ட விரோதமாக தேர்வு வினாத்தாள்களை பெறுபவர்கள், கேள்விகள் மற்றும் பதில்களை கசிய செய்தல், கணினி வலை அமைப்பில் குளறுபடி செய்பவர்கள் அல்லது போலி தேர்வுகளை நடத்துபவர்கள் குற்றமாக கருதப்படுவார்கள். அவர்களுக்கு ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க இந்த சட்டத்தின் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது