திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாரப்பநாயக்கன்பட்டியில் லட்சுமியம்மாள், அச்சம்மாள், சின்ன லட்சுமி அம்மாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் அமைந்துள்ளது. இங்கு இருக்கும் பழமையான கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கோவில் வளாகத்தில் புற்று ஒன்று தானாக உருவாகியுள்ளது.
விநாயகர் வடிவத்தில் இருக்கும் அந்த புற்றுக்கு பக்தர்கள் மாலை அணிவித்து, பால் ஊற்றி, கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளனர். இதனை அறிந்த பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த மக்களும் லட்சுமியம்மாள் கோவிலுக்கு சென்று புற்றை பார்த்து வழிபட்டு சென்றனர்.