“விநாயகர் சதுர்த்திக்கு தடை” நாங்க இததான் அப்புறம் செய்வோம்… இந்து மக்கள் கட்சி…!!

அரசின் தடைகளை மீறி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் கூறியுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி, பாரத் சேனா, சக்தி சேனா உள்ளிட்ட 12 அமைப்புகள் கலந்து கொண்டன. இந்த ஆலோசனை கூட்டம் தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் கூறுகையில் “தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை விலக்கி  கொள்ள வேண்டும், இல்லையென்றால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

மேலும் தங்களது மனுவைப் மறு பரிசீலனை செய்து விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கான எங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழா நடத்த  அனுமதி தரவேண்டும். இல்லையென்றால்  தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து தடைகளையும் மீறி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *