வித்தியாசமான கெட்டப்பில் மாதவன் வெளியிட்ட புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்…!!!

நடிகர் மாதவன் வித்தியாசமான கெட்டப்பில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .

தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வருபவர் நடிகர் மாதவன் . இவர் அலைபாயுதே, மின்னலே ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் . தற்போது இவர் நடிப்பில் ‘மாறா’ திரைப்படம் தயாராகி ஓடிடியில் வெளியாக உள்ளது . சமீபத்தில் நடிகர் மாதவன் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் மாதவன் சத்ரபதி சிவாஜி முதல் 8 விதவிதமான கெட்டப்புகளில் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார் ‌. இந்த புகைப்படங்கள் திரைப்படங்களுக்காக எடுத்தது அல்ல , இருப்பினும் எந்த கெட்டப் எனக்கு பொருத்தமாக இருக்கும் என ரசிகர்களிடம் நடிகர் மாதவன் கேட்டிருக்கிறார் . அதில் பெரும்பாலானோர் சத்ரபதி சிவாஜியாக இருக்கும் தோற்றம் அற்புதமாக இருப்பதாக பதிலளித்துள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *