விதிமுறைகளை மீறி வந்த ஓட்டுநர்…. 10-க்கும் மேற்பட்டோர் காயம்…. கோர விபத்து…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை வேன் ஒன்று ஏற்றி கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல் மற்றொரு வேன் தனியார் நிறுவன ஊழியர்களுடன் ஶ்ரீபெரும்புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் பாப்பான் சத்திரம் அருகே சென்றபோது போக்குவரத்து நெரிசல் காரணமாக விதிமுறைகளை மீறி ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்த வேன் ஓட்டுநர் சாலையின் எதிர் திசையில் வேகமாக சென்றுள்ளார்.

அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் இரு வேன்களின் ஓட்டுநர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.