விண்வெளிப்பயணம் வீடியோவை… வெளியிட்ட பெசோஸ்… எப்படி இருக்குனு நீங்களே பாருங்க…!!!

அமேசான் நிறுவனத்தை உருவாக்கிய உலகின் பணக்கார தொழிலதிபர் ஜெஃப் பெஸோஸ் வெற்றிகரமாக தனது விண்வெளி பயணத்தை முடித்துள்ளார். இந்த விமான பயணத்தின் மூலம் அவர் புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த பயணத்தில், பெசோஸ் உடன், அவரது சகோதரர் மார்க் பெசோஸ், அமெரிக்க நாட்டை சேர்ந்த 82 வயதுடைய, ஓய்வு பெற்ற மூத்த பெண் விமானி வாலி பங்க் (Wally Funk), 8 வயது ஆலிவர் டையமென் (Oliver Daemen) ஆகியோர் ஆகியோர் பயணம் மேற்கொண்டனர்.

அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராக்கெட் ஏவுதலத்தில் இருந்து ப்ளூ ஆரிஜின் ராக்கெட் புறப்பட்டது. அந்த பயணத்தின் போது நால்வரும் விண்வெளிக்கு சென்றதும் புவியீர்ப்பு சக்தி இல்லாமல் மிதந்த காணொளியை பெசோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *